விமான நிலையத்தில் பரபரப்பை கிளப்பிய டிரோன்… கடைசியில் “Toy Drone” ஆ?

கோவை: கோவை விமான நிலைய இயக்கப் பகுதியில் அத்துமீறி பறந்த டிரோனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த டிரோன் குழந்தைகள் விளையாட்டிற்காக பயன்படுத்தும் பொம்மை டிரோன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

கோவை விமான நிலையத்தின் இயக்கப் பகுதியில் கடந்த 1-ம் தேதி மாலை டிரோன் ஒன்று பறந்தது. இதனால் விமானப் போக்குவரத்து இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானதுடன், பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்தது. இதையடுத்து விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி சந்திரன் (53), பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான நிலைய இயக்கப் பகுதியில் டிரோனை பறக்கவிட்டது யார், எதற்காக டிரோன் பறக்கவிடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் டிரோன் ஒன்று கீழே விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அது குழந்தைகள் விளையாடுவதற்காக பயன்படுத்தப்படும் பொம்மை டிரோன் என்பது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த டிரோனில் புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவு செய்வது போன்ற வசதிகள் எதுவும் இல்லை.

குழந்தைகள் விளையாடும் டிரோன் என்றாலும், விமான நிலைய இயக்கப் பகுதியில் அதனை பறக்கவிட அனுமதி கிடையாது. டிரோன் எப்படி விமான நிலையப் பகுதிக்குள் வந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சுப பலன்களை கொடுக்க வருகிறது மகாளய அமாவாசை; இந்த 5 விஷயங்களை செய்ய மறந்திடாதீங்க…!

கோவை: எதிர்வர இருக்கும் மகாளய அமாவசை தினத்தில் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம். பொதுவாக அமாவாசை நாட்களில் நமது 3 தலைமுறை முன்னோர்கள் பூமிக்கு வந்து, அவரவர்...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...