கோவை விமான நிலைய விரிவாக்கம்- மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சின்னியம்பாளையம் மற்றும் நீலாம்பூர் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் மற்றும் கோவை விமான நிலைய உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள தற்போதைய நிலவரம், பணிகளின் வேகம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆட்சியரிடம் விளக்கினர்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, நிலம் வழங்க உள்ள சின்னியம்பாளையம் மற்றும் நீலாம்பூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் நேரில் சந்தித்துப் பேசிய போது, நிலம் கையகப்படுத்துவதில் தங்களுக்கு உள்ள நடைமுறைச் சிக்கல்கள், இழப்பீடு மற்றும் மாற்று இடங்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.

Advertisement

பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர், அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, விரிவாக்கப் பணிகள் தொய்வின்றி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...