மாணவர்களின் உயர்கல்விக்கு நிதி உதவி வழங்கிய கோவை ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில்,உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 2025-26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை 20 மாணாக்கர்களுக்கு தனியார் பங்களிப்புடன் ரூ.15 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் பயிற்சி) துஷார் சிங், மாவட்ட உயர்கல்வி கண்காணிப்பு அலுவலர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி கிருஷ்ணபிரியா PROPEL நிறுவனத்தின் செயல் அலுவலர் வித்யா செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில்2025-26 ஆம் கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் 11353 இதில் 10,408 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் உயர் கல்வி 10,001 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

Advertisement

மேலும், பனிரெண்டாம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னெடுப்பில் இதுவரை சுமார் 120 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாணாக்கர்கள் உயர் கல்விக்காக உதவியமைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

முதல் தலைமுறை ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை- கோவை ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில், தொழில் மையம் சார்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட ஏற்றுமதி...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...