கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில், தொழில் மையம் சார்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) துஷார் சிங், மாவட்ட தொழில் மைய (பொது மேலார் சண்முக சிவா அரசு அலுவலர்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தொழில் முன்னேற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். நமது மாவட்ட தொழில் நிறுவனங்கள் அரசு மேற்கொள்ளும் தொழில் சாரந்த முன்னேற்ற திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி நாமும் அதன் மூலம் பயன்பெற வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்ட தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு முக்கியமாக இருவேறு திட்டங்களான நிர்யத் புரோத்சகான் மற்றும் நிர்யத் திசா ஆகிய திட்டங்களை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். மாவட்ட ஏற்றுமதி வணிகத்தை அதிகரிக்க வேண்டும்.
முதல் தலைமுறை ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கவும் பெண் தொழில் முனைவோர் ஏற்றுமதியாளர்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் பலவேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.





