Coimbatore Weather: 6 நாட்களுக்கான வானிலை… எந்தெந்த நாட்களில் மழை?

Coimbatore Weather: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை நாள் வாரியாக பார்க்கலாம்.

Advertisement

கோவை மாவட்டத்தில் இன்று வானம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும்.

வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குடை அல்லது மழைக்கோட்டை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகபட்ச வெப்பநிலை 31–33°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21–22°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வெள்ளிக்கிழமையும் மேகமூட்டமான வானிலையே நீடிக்கும். குறிப்பாக மதியம் முதல் இரவு வரை, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாநகரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். அதிகபட்ச வெப்பநிலை 31–33°C, குறைந்தபட்சம் 21–22°C ஆக இருக்கும்.

Also Read: பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – போலீஸ்காரர் கைது…

Advertisement

சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் வறண்ட வானிலை இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் வெளியே செல்ல திட்டமிடுபவர்கள் மாலை நேர வானிலை மாற்றத்தை கருத்தில் கொள்ளலாம். வெப்பநிலை 32–33°C வரை பதிவாகும் நிலையில், இரவில் இதமான காலநிலை நிலவும்.

ஞாயிற்றுக்கிழமை ஓரளவு மேகமூட்டமான வானிலையுடன் இருக்கும், புறநகரில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். மழை இடைவெளி விட்டு பெய்யும் வாய்ப்பு அதிகம். வெளிப்புற நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் வானிலை மாற்றத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதிகபட்ச வெப்பநிலை 32–33°C, குறைந்தபட்சம் 21–22°C ஆக இருக்கும்.

Also Read: பக்தி வெள்ளத்தில் திளைத்த ஏழூர் பிரிவு; ஸ்ரீ ஆண்டாள் அம்மன் ஆடி கழிவு திருவிழா கோலாகலம்

திங்கட்கிழமை வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் மற்றும் புறநகரை ஒட்டியுள்ள நகரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெப்பம் சற்று அதிகமாக இருந்தாலும், மழைக்குப் பிறகு குளிர்ச்சியான சூழல் நிலவும்.

செவ்வாய்க்கிழமையும் கோவையில் மழைக்கான வாய்ப்பு தொடரும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்சம் 32–33°C மற்றும் குறைந்தபட்சம் 21–22°C வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், புறநகரிலும் மழையை எதிர்பார்க்கலாம், நகரப் பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழைக்கே வாய்ப்புள்ளது.

கோவையின் அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூருடன் இணைந்திருங்கள்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில், செவிலியர்கள் இன்று மூன்றாவது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...