கோவை மாநாகராட்சியில் 279 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகள் திறப்பு…

கோவை: கோவை மாநகராட்சியில் 279 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளில் ரூ.279 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 3 எண்ணிக்கையிலான பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5 மண்டலங்களுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்றைய தினம் (21.022026) மத்திய மண்டலம், வார்டு எண்.63-க்குட்பட்ட இராமநாதபுரம், நாகப்பதேவர் வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.101 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தினையும்

Advertisement

வார்டு எண்.82-க்குட்பட்ட கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநில நிதி (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் ரூ.82.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறைகளையும், வார்டு எண் 30-க்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.96.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகளையும் என மொத்தம் ரூ.279 கோடி மதிப்பீட்டில் 3 எண்ணிக்கையிலான பணிகளை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 29-க்கு உட்பட்ட ஆசிரியர் காலனியில் ரூ.34.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வார்டு அலுவலகத்தினையும் என வடக்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.313.20 இலட்சம் மதிப்பீட்டில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்.

Advertisement

மேலும், ஆசிரியர் காலனி பகுதியில் ரூ.54.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...