வடகிழக்கு பருவமழை துவக்கம்.. பள்ளிகளில் வாரம் 2 முறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீயணைப்புத்துறை

கோவை : வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதை முன்னிட்டு, மழைக்கால பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தீயணைப்புத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் மழை, இடி, மின்னல் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மழைக்காலத்தில் பள்ளி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் வாரத்திற்கு 2 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளின்போது, மழைக்காலங்களில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் எடுத்துரைக்க உள்ளனர். குறிப்பாக, இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் மரங்களின் கீழ் நிற்கக்கூடாது என்றும், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள் அருகே செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட உள்ளது.

Advertisement

மேலும், மழை பெய்யும் நேரங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின்சார சாதனங்களை தொடக்கூடாது என்றும், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகே செல்லக்கூடாது என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுதவிர, பள்ளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செல்லும் தீயணைப்புத்துறையினர், அங்குள்ள மின் பராமரிப்பு பணிகள், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் மற்றும் விழும் நிலையில் உள்ள மரங்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

Advertisement

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இடி, மழை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை கடக்கும்போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை கண்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படும்.

மேலும், பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்கள், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களின் உறுதித்தன்மை குறித்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படும் என்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...