கோவையில் பெண் யானை உயிரிழப்பு…

கோவை: கோவையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு பகுதியில், வயதான பெண் காட்டு யானை ஒன்று இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு, எட்டிமடை சுற்றுக்கு உட்பட்ட போளுவாம்பட்டி பிளாக் 1, திமில் மலை காப்புக்காடு பகுதியில் வனப்பணியாளர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, ஒரு பெண் யானை அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையை ஆய்வு செய்தனர். உயிரிழந்தது ஒரு வயதான ஒற்றை பெண் யானை என்பது உறுதி செய்யப்பட்டது.

யானையின் உடலில் காயங்களோ ? அல்லது எவ்வித வெளிக் காயங்களோ ? இல்லை என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.

Advertisement

இயற்கை மரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
யானையின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய, மாவட்ட வன அலுவலர் (DFO) நேரடி மேற்பார்வையில், வன மருத்துவக் குழுவினர் முன்னிலையில் முறையான உடற்கூறு ஆய்வு (Post-mortem) செய்யப்படும். ​

பிரேத பரிசோதனைக்குப் பிறகே யானையின் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.