கோவையில் நவராத்திரி விழா: கொலு பொம்மைகளைப் போல அணிவகுத்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள்!

கோவை: நவராத்திரி பண்டிகையையொட்டி, கோவைப்புதூரில் நடைபெற்ற விழாவில் 100-க்கும் மேற்பட்ட மழலைக் குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கொலு பொம்மைகளைப் போல அணிவகுத்து நின்றனர். வண்ணமயமான ஆடைகள், கிரீடங்கள், அணிகலன்களுடன் காட்சியளித்த குழந்தைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.

நவராத்திரி பண்டிகையின்போது வீடுகளில் கொலு வைத்து அம்மனை வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு, கோவைப்புதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

இதில் சுமார் மூன்று வயதே நிரம்பிய மழலைக் குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து பங்கேற்றனர். பள்ளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொலுவின் முன்பு நடைபெற்ற சிறப்புப் பூஜையிலும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய திருத்தலங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் குழந்தைகள் வேடமணிந்திருந்தனர்.

Advertisement

அஷ்டலட்சுமிகள், தசாவதாரம், தெய்வத் தம்பதியர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களும் விழாவுக்கு சிறப்புச் சேர்த்தன.

VIDEO

மேலும், மதுரை மீனாட்சி அம்மன், கருமாரியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடங்களில் குழந்தைகள் தத்ரூபமாகக் காட்சியளித்தனர்.

Advertisement

வண்ணமயமான ஆடைகள், கிரீடங்கள் மற்றும் அணிகலன்களுடன் கொலு பொம்மைகளைப் போல வரிசையாக அமர்ந்தும் நின்றும் காட்சியளித்த மழலைகளைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். குழந்தைகளின் அழகிய அணிவகுப்பு விழாவின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...