Breaking: கோவையில் துயரம்; நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி உயிரிழப்பு!

கோவை: கோவையில் நீட் (NEET) தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. இவர் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார்.

Advertisement

இவரது மகள் அனு கீர்த்தனா (19). இவர் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற இலக்குடன் நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், மீண்டும் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தேர்வு தொடர்பான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த தலைவலி தைலத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

Advertisement

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்த குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வரும் நிலையில், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோவை மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...