கோவையில் சர்வ சாதாரணமாக கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடிய நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சூலூர் அருகே பேக்கரியை உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில், பைபாஸ் சாலையில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பேக்கரியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் கல்லாப்பெட்டியையும் உடைத்து அதில் இருந்த 7,000 ரொக்கப் பணம் மற்றும் கடையிலிருந்த 10,000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடி சென்றுள்ளார். மறுநாள் காலை கடை திறக்க வந்தபோதுதான் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.

அதேபோல பைபாஸ் சாலையில் உள்ள மற்றொரு பெட்டிக்கடை ஒன்றிலும் 8000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

இதற்கிடையே, கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் மர்ம நபர் கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை எடுப்பதும், சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்வதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...