கோவை: தெர்மாகோல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தெர்மாகோல்கள் உட்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.
பீளமேடு பகுதியில் உள்ள கிரிஅம்மன் கோவில் வீதியில் தனியாருக்கு சொந்தமான தெர்மாகோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு 15-க்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக திடீரென தொழிற்சாலை வளாகத்தில் தீப்பிடித்தது.
விபத்து ஏற்பட்ட சிறுது நேரத்திலேயே தீ தெர்மாகோல் தொழிற்சாலையில் உள்ள அனைத்து பொருட்களிலும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் அதிகளவில் கரும்புகை எழும்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “குடியிருப்பு பகுதியில் இதுபோல தொழிற்சாலை இயங்கக்கூடாது இதற்கு அரசு அதிகாரிகள் அனுமதி கொடுக்கக் கூடாது. நல் வாய்ப்பாக இதில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை” என்றனர்.

