பொது வேலை நிறுத்தம்: கோவை – கேரளா பேருந்து சேவைகள் முடங்கியது

கோவை: பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை.

Advertisement

நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர்.

இதனால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அரசுப் பேருந்து சேவை முடங்கியுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சேவைகள் இன்று இயங்கவில்லை.

Advertisement

உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், அதிகாலை முதலே கேரளா நோக்கி பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

முன்பதிவு செய்திருந்த பயணிகள், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அவசர தேவைக்காக பயணம் செய்ய வந்த பொதுமக்கள் மாற்றுப் போக்குவரத்தைத் தேடி அலைந்து வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையில், கோவையில் இருந்து இயக்கப்படும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் கேரளா எல்லை வரையிலேயே இயக்கப்படுகின்றன. எல்லையைத் தாண்டி சேவை வழங்கப்படவில்லை.

இதனால் எல்லைப்பகுதிகளில் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன் சேவை நிலவரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Flipkart Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...