கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: ஆட்சியர் அலுவலகம், விமான நிலையத்தை தொடர்ந்து
கோவை தபால் நிலையங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், கோர்ட் உட்பட மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், போலீசார் சோதனை நடத்துவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் புதியதாக தபால் நிலையங்களுக்கு முதல் முறையாக வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது.

Read also சட்டமன்ற தேர்தல்- பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி விழிப்புணர்வு வாக்கத்தான்...

நேற்று மதியம் குட்சேட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த இமெயிலில் தலைமை தபால் நிலையம், டிபி ரோட்டில் உள்ள தபால் நிலையம், ரயில் நிலையத்தில் உள்ள தபால் நிலையம் ஆகிய இடங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டு உள்ளது.

சிறிது நேரத்தில் அது வெடித்து சிதற உள்ளது என இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தபால் நிலைய அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் அனைத்து தபால் நிலையங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

Read also விஜய்க்கு நான் பாட்டு பாட மாட்டேன்… ஒரே போடா போட்ட கானா வினோத்!

தபால் நிலையம் வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளும், வாகனம் நிறுத்தும் இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதேபோல உப்பிலிப்பாளையம் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் வந்தது.

அங்கும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்ற படவில்லை. நீண்ட சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வழக்கம் போல புரளி என்பது தெரிய வந்தது. இதனால் ஊழியர்கள், தபால் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பொள்ளாச்சியில் ஆவணங்கள் இருந்தும் பணம் பறிமுதல்; வியாபாரி குமுறல் – வீடியோ

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணத்துடன் கொண்டு வந்த 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக மீன் வியாபாரி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில்...

Video