கோவையில் அதிகரிக்கும் வெயிலால் நுங்கு, இளநீர் விற்பனை அமோகம்

கோவை: கோவையில் கடந்த ஒரு வாரமாக வெயில் தீவிரமாக அதிகரித்துள்ளதால், உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு, இளநீர், தர்பூசணி, பழ ஜூஸ் கடைகளில் விற்பனை அமோகமாக உயர்ந்துள்ளது

Advertisement

கோவையில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களும் பகல் நேரத்தில் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Read also கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர் பரிதாப பலி!

இந்நிலையில், கோடையை சமாளிக்க மக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சாலையோரங்களில் தற்போது தர்பூசணி, இளநீர், நுங்கு, பழ ஜூஸ் போன்ற தற்காலிக கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன.மேலும் தற்போது நுங்கு, பதநீர் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

Advertisement

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து நுங்கு, பதநீர் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 நுங்கு பதநீருடன் சேர்த்து ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read also கோவையில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி- வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை…

Advertisement

காந்திபுரம், உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தை விட அடுத்த மாதம் வியாபாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.’’ என்றனர். இதேபோல், தர்பூசணி கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரைக்கும், இளநீர் ஒன்று ரூ. 50 முதல் ரூ.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Amazon Link 3
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…

கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...