கோவை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
SIR விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
20க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் அருகில் உள்ள SBI வங்கி முன்பு இருந்து முகமூடி அணிந்தும் கையில் சங்கிலியால் கட்டியபடியும் ஊர்வலமாக முழக்கங்களை எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஞானேஷ்குமாரின் புகைப்படத்தை கிழித்தெறிந்து கண்டங்களை பதிவு செய்த அவர்கள் அவரது புகைப்படத்தை தீயிட்டு எரிக்க முயன்றனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால்
காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் கோவை ரயில் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






