கோவை மாநகர காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! என்ன காரணம்?

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வருபவர் கண்ணன். இவர் ஏற்கனவே சென்னையில் கூடுதல் ஆணையராக பணியாற்றியவர்.

அப்போது, ஜெம் கிரைனைட் நிறுவனத்தின் தலைவர் வீரமணி என்பவர் சிறுமிகளை வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் இது தொடர்பான வீடியோ மட்டும் கிடைத்த நிலையில், அந்த வீடியோவை வைத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அப்போது வீடியோவில் உள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் போக்சோ நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், வீடியோ ஆதாரம் இருந்தும் ஒரு நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஏற்கும் வகையில் இல்லை என்று கூறி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டது.

Advertisement

இந்த வழக்கில் போலீசார் முறையாக விசாரணை நடத்தாமல் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், தற்போதைய சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் மற்றும் கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன், கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின் உட்பட 5 அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

இதனிடையே, தற்போது கண்ணன் கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வரும் நிலையில், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பதவியில் இருக்கும் ரம்யா பாரதி, கோவை மாநகர காவல் ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படாத குற்றச்சாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாடு அரசின் அதிரடியான நடவடிக்கை என்று பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து...