கோவையில் உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு…

கோவை: கோவை இராமநாதபுரம் பகுதியில் உழைப்பாளர் நலக்கூடம் திறக்கப்பட்டது.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தபோது, இராமநாதபுரம் 80 அடி ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் ரூ.40.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் 80 அடி ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமசந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேட்பாட்டுத்துறை அமைச்சர் தொழிலாளர் துறையின் மானியக் கோரிக்கையின் போது கட்டுமான பணியிடங்களுக்கு செல்வதற்காக கூடும் கட்டுமானத் தொழிலாளர்கள் இடங்களில் அத்தொழிலாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு குடிநீர் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இராமநாதபுரம் 80 அடி ரோடு பகுதியில் குடிநீர், நாற்காலிகள், மின்விசிறிகள், மின்விளக்குகள், மற்றும் கைப்பேசி சார்ஜர் ஆகிய அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளர் நலக்கூடம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...