கோவை: தேர்தலை முன்னிட்டு கோவை மாநகரில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும் அமைதியான தேர்தல் சூழலை உறுதி செய்வதற்கும் கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read also சட்டமன்ற தேர்தல்- பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி விழிப்புணர்வு வாக்கத்தான்...
அதன்படி கோவை மாநகர் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பழங்குற்றவாளிகள் மற்றும் முந்தைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் மீது சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது, 594 ரவுடிகளிடம் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.
சிறை
இதுகுறித்து போலீசார் கூறியதவாது:-
தேர்தல் காலத்தில் எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படாதவாறு இருக்க தொடர்ந்து கண்காணிப்பு பணி மற்றும் தீவிர ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Read also கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர் பரிதாப பலி!
இதன் ஒரு பகுதியாக 594 ரவுடிகளிடம் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. அவர்கள் ஏதாவது தவறு செய்து கைது செய்யப்பட்டால் பிணை பத்திர காலம் முடியும் வரை சிறையில் இருந்து வெளியே வர முடியாது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

