கோவையில் 10 கோடி மதிப்பிலான வைரம் தங்கம் பறிமுதல்…

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் 10 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அதிகாரிகள் டெம்போ ட்ராவலர் வாகனத்தை சோதனை செய்த போது 10 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் கொண்டுவரப்பட்டது கண்டறிப்பட்டது.

ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் சேர்த்தனர். விசாரணையில் அது தனியார் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரியவந்தது.

Advertisement

அதை கைப்பற்றிய தேர்தல் தேர்தல் பறக்கும் அதிகாரி படை சாமிநாதன் காவல் உதவி ஆய்வாளர் ஜில்லி கிரிஸ்டி ட்ராவலர் தனசேகரன் ஆகியோர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு தங்க நகைகள் ஆய்வு செய்தனர்.

அதன் மதிப்பு 10 கோடியே 18 லட்சத்து 21,000 என கண்டறியப்பட்டு அதை அரசு கருவூலத்திற்கு கொண்டு சென்றனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நாளை முதல் கோவை விமான நிலையத்தில் யாத்ரிசேவான் அபியான் நிகழ்ச்சி…

கோவை: கோவை விமான நிலையத்தில் நாளை முதல் ‘யாத்ரி சேவா அபியான்’ விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வரும் செப்டம்பர் 17-ஆம்...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...