கோவை சாலையோர வியாபாரிகளே கவனிங்க! வங்கி கடன் சிறப்பு முகாம் – முழு விவரம்

கோவை: கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வரை வங்கி கடன் வழங்கும் சிறப்பு முகாமில் 181 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் சில நாட்களில் முகாம் நடைபெற உள்ளது..

Advertisement

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் ‘லோக் கல்யாண் மேளா’ சிறப்பு முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற முகாமில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் பங்கேற்று கடன் பெற விண்ணப்பித்தனர்.

மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற முகாமில், மொத்தம் 181 பேர் வங்கி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

Advertisement

தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 25), ஆகஸ்ட் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

கடன் பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு…

கோவை மாநகரில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...