சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் அவ்வளவு தான்- கோவையில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் அச்சம்…

கோவை: சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தள்ளுவண்டி கடையினர் உள்ளனர்.

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடை நடத்த முடியாமல் போய்விடும் வாழ்வாதாரம் பெரியதளவு பாதிக்கப்படும் என்று சாலையோர தள்ளுவண்டி கடையினர் அச்சத்தில் உள்ளனர்.

வளைகுடா நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற ஐயம் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக பலரும் முன்கூட்டியே அதிகப்படியான சிலிண்டர்களை புக்கிங் செய்து வருகின்றனர். குறிப்பாக வணிக சிலிண்டர்கள் புக்கிங் என்பது அதிக அளவு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஹோட்டல்களுக்கான வணிக சிலிண்டர்கள் டெலிவரி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவையை பொருத்தவரை ஒரு சில உணவகங்களில் உணவு மெனுக்கள் குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளிலும் சில தின்பண்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்த நிலையில் சாலையோரம் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருபவர்களும், டீ தின்பண்டங்கள் விற்பனை செய்பவர்களும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

வழக்கமாக வாங்கும் சிலிண்டர்களுக்கு தற்போது சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் கடையை மூட வேண்டும் அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

Advertisement

கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்றால் பழையபடி விறகு அடுப்புகளுக்கு தான் மாற வேண்டும் அவ்வாறு விறகு அடுப்பு மாறினால் தற்பொழுது உள்ளது போல் வியாபாரம் பெரிதளவு இருக்காது என்கின்றனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...