வீரகேரளத்தில் அடுக்குமாடி வீட்டில் விபசாரம்; புரோக்கர் சிக்கினார்

கோவை : கோவை வீரகேரளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து, பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்ததாக கூறப்படும் புரோக்கரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர், தென்றல் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒருவர், தன்னிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும், பணம் எடுத்து வந்த பின்னர் வருவதாகவும் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற அவர், நடந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அஜயன் (27) என்பது தெரியவந்தது.

Advertisement

மேலும், அஜயன் வீரகேரளம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும், அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அஜயன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இஸ்ரோ பற்றி தெரிந்து கொள்வதற்கு கோவையில் ஓர் வாய்ப்பு…

கோவை: இஸ்ரோ பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கோவையில் 3 நாட்கள் விண்வெளிக் கண்காட்சி நடைபெறுகிறது. கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி வார விழாவை முன்னிட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...