டேட்டிங் ஆப் பழக்கம் விபரீதம்; ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கும்பல்!

கோவை : ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் பழகி தனியார் நிறுவன ஊழியரை அறைக்கு வரவழைத்து மிரட்டி, அவரது செல்போன் மூலம் ரூ.99 ஆயிரத்தை கூகுள் பே வழியாக மாற்றிக் கொண்ட 4 வாலிபர்களை வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவையை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ‘கிரைண்டர்’ ஆப் மூலம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கவியரசன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி மதியம் கவியரசன் அந்த வாலிபரை சந்தித்து, தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு சம்மதித்த அவர், கவியரசனுடன் வடவள்ளி வி.என்.ஆர். நகர் 6-வது வீதியில் உள்ள அவரது அறைக்கு சென்றுள்ளார்.

அங்கு கவியரசனின் நண்பர்கள் 3 பேர் இருந்துள்ளனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென 4 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை சூழ்ந்து கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

Advertisement

தன்னிடம் பணம் இல்லை என அவர் கூறியதை தொடர்ந்து, அவரது செல்போனை பறித்துக் கொண்ட 4 பேரும், கூகுள் பே மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்தை தங்களது கணக்கிற்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வாலிபரை அறையில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், பணம் பறித்ததாக தேவகோட்டையை சேர்ந்த கவியரசன் (22), வினோத்குமார் (32), முகேஷ்குமார் (20) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் புலியூரை சேர்ந்த முத்துகுமார் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

‘கல்வியே முதன்மை’ திட்டம்; கல்லூரி மாணவர்கள் மீது 10 வழக்குகள் பதிவு

கோவையில் ‘கல்வியே முதன்மை’ திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களை கண்காணித்து இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...