கோவையில் கல்லூரி மாணவன் உயிரிழந்த விவகாரம்- சக நண்பர்கள் கைது…

கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவன் சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உட்பட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கோவை- பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அமுதன்(20) என்ற மாணவனை நேற்று முன் தினம் காலை ஒரு கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து செட்டிப்பாளையம் போலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் (10.08.2026) தேதி அதிகாலை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி படித்து வசித்து வரும் இளவரசன் என்ற மாணவரின் அறைக்கு சென்ற அமுதன் அடங்கிய கும்பல் அறையில் இருந்த மாணவர்களை மிரட்டி செல்போனை பறித்து சென்றதாகவும் இது குறித்து இளவரசன் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் பின்னர் நேற்று முன் தினம் காலையே அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் ஆகியோர் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்த போது இளவரசன் அறையில் தங்கியிருந்த சிலர் அமுதனை கண்டறிந்து வழிமறித்து கல்லூரிக்கு பின்புறம் அழைத்து சென்று தாக்கியது தெரியவந்தது.

அந்த தாக்குதலுக்கு பின் சுமார் காலை சுமார் 10 மணியளவில் அமுதன் அறைக்கே சென்றுள்ளார். பின்னர் மதியம் சுமார் 3 மணியளவில் அமுதனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செய்யப்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அமுதனின் நண்பர் ஸ்ரீமன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட ஆறமுதன்(20), அரவிந்த் (21), சிவ ரோகித்(20), மணிபாலு(20) மற்றும் ஆகிய ஐந்து பேர் செட்டிப்பாளையம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொலை செய்யப்பட்ட அமுதனின் உடல் நேற்றே அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நெருங்கி வரும் சுதந்திர தினம்- கோவையில் பாதுகாப்பு தீவிரம்…

கோவை: சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.