கோவையில் மாட்டுக்கு நேர்ந்த சோகம்- விவசாயி கைது…

கோவை: கோவையில் நாட்டு வெடி கடித்து காளை மாடு படுகாயம் அடைந்த நிலையில் விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கோவையில் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு ஒன்று வாய் சிதைந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (65). இவர் நேற்று (11.08.2026) காலை 10 மணி அளவில் தனது இரண்டு காளை மாடுகளை அப்பகுதியில் உள்ள எள் காட்டில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வீசப்பட்டிருந்த “அவுட்டுகாய்” என்றழைக்கப்படும் நாட்டு வெடியை ஒரு காளை மாடு எதிர்பாராதவிதமாக கடித்துள்ளது. இதில் வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து, காளையின் வாய் பகுதி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தது.
இப்பகுதியில் கால்நடைகள் தொடர்ந்து மேய்ந்து வருவதால், வேட்டைக்காக வெடி வைக்க வேண்டாம் என பழனிசாமி ஏற்கனவே எச்சரித்திருந்தும், அதே பகுதியைச் சேர்ந்த ராயன் (70) என்பவர் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக இந்த நாட்டு வெடியை வைத்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராயனைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது வீட்டிலிருந்து சில நாட்டு வெடிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாட்டை காயப்படுத்தியதோடு சட்டவிரோதமாக நாட்டு வெடி வைத்திருந்த குற்றத்திற்காக 70 வயதான ராயன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காயமடைந்த காளை மாட்டிற்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நெருங்கி வரும் சுதந்திர தினம்- கோவையில் பாதுகாப்பு தீவிரம்…

கோவை: சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.