கோவை: கோவையில் சமரச தீர்வு முகாம் 3.0 விழிப்புணர்வு பேரணி மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையம் காட்டியுள்ள வழிகாட்டுதலின்படி பல்வேறு பகுதிகளில் சமரச தீர்வு முகாம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் சார்பு நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரயில் நிலையம் கோவை அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் பொது மக்களை சந்தித்து சமரச தீர்வு முகாம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி எடுத்துரைத்தனர். சமரசம் என்றால் என்ன அதன் நோக்கங்கள் என்ன எதற்காக அதனை செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இந்த பேரணியில் மாவட்ட முதன்மை நீதிபதியும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி இது குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.





