கோவையில் கொடூரத் தாய்- நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…

கோவை: உறவிற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற வழக்கில் நீதிமன்றம் தாய்க்கும், ஆண் நண்பருக்கு தண்டனை வழங்கி உள்ளது.

Advertisement

கோவையில் முறையற்ற உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது மகனை கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாய்க்கு 10 ஆண்டு சிறை மற்றும் ஒற்றை ஆயுள் தண்டணையும், அவரது ஆண்நண்பருக்கு 13 ஆண்டு சிறை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனையும் அளித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோவை மாநகர் கோவில்மேடு பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கு அபிஷேக் என்ற 6 வயது மகனும், வர்ஷினி என்ற 3வயது மகளும் இருந்தனர். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரித்து சென்ற நிலையில் ,
குழந்தைகளுடன் திவ்யா தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை(35) என்ற டிரைவருக்கும் திவ்யாவிற்கு முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முறையற்ற உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது மகன் அபிசேக்கை
கடந்த 2020ம் ஆண்டு ராஜதுரையும், திவ்யாவும் அடித்து கொன்றனர்.

Advertisement

இந்த வழக்கில் சாய்பாபா காலனி போலீசார் திவ்யாவையும், அவரது ஆண்நண்பர் ராஜதுரையையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டணை,13 ஆண்டுகள் சிறைதண்டணை, 1.10 லட்சம் அபராதமும், திவ்யாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டணை, ஒற்றை ஆயுள் தண்டணையும் விதித்தார். இதனையடுத்து தண்டணையை
ஏககாலத்தில் அனுபவிக்க முடியாது எனவும், தனித்தனியாக தண்டணை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்திரவிட்டுள்ளார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.