பைக் விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

கோவை: கோவை ஆத்துப்பாலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (20). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பரான ஜபருல்லா (24) என்பவருடன் நேற்று பைக்கில் குனியமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜபருல்லா பைக்கை ஓட்டிய நிலையில், சம்சுதீன் பின்னால் அமர்ந்திருந்தார்.

Advertisement

ஆத்துப்பாலம் அருகே வந்தபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது சம்சுதீன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சம்சுதீன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த ஜபருல்லாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...