சிறுவாணி, பில்லூர் அணைகளின் இன்றைய நிலவரம்

கோவை: சிறுவாணி மற்றும் பில்லூர் அணையில் நீர் இருப்பு நீர் வெளியேற்றும் குறித்த தகவலை நீர்வளத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் தற்போது 41.33 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த அணையில் 44.61 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்க கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் அணைப்பகுதியில் 84 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடியாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பு தூய்மை…

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள் சிறப்பு தூய்மை செய்யப்பட்டன. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய...

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.