24 மணி நேரத்தில் ஆவணங்கள்- அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்…

கோவை: புதிய திட்டத்தில் ஆவணங்களை 24 மணி நேரத்தில் டவுன்லோடு செய்யலாம் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் பதிவுத்துறை சார்பில் ஆவண பதிவு குறித்தான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஆவண பதிவு ஆன்லைன் முறை நடைமுறைக்கு வர உள்ளதை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வருகை இல்லா பத்திரப்பதிவு திட்டம் ஆன்லைன் மூலம் கொண்டுவரப்படுகிறது என்றும் வருகின்ற 17ஆம் தேதி First Plot First Flat ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தார்.

Advertisement

17ஆம் தேதி இதனை தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் என்றும் ஆன்லைன் முறை வந்தாலே எளிய மக்கள் அனைவருக்கும் எளிமையாகும் என்று கூறினார்.

மேலும் ஆவணங்களை 24 மணி நேரத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...