தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. அது மட்டும் இன்றி தோட்டங்களிலும் தோட்டத்து வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கால்நடை தீவனங்களையும் தின்று செல்கிறது.

இந்த நிலையில் கடந்த சில இரண்டு மூன்று தினங்களாக பெரிய தடாகம், அனுவாவி சுப்ரமணிய கோவில் சுற்று பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்து வருவதால் பக்தர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை பெரிய தடாகம்- குட்டைவழி செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்று கால்நடை தீவனங்களை தேடிச் சென்றுள்ளது.

Advertisement

தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் ஒற்றைக் காட்டு யானை வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று மீண்டும் அதே கேட் வழியே வெளியேறியது பதிவாகி உள்ளது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...