கோவையில் நடைபெற்ற நாய்கள் சேம்பியன்ஷிப் கண்காட்சி…

கோவை: கோவையில் அனைத்து இன நாய் சேம்பியன்ஷிப் கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisement

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலைஅறிவியல் தனியார் கல்லூரியில் தி கென்னல் ஆஃப் இந்தியா, கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் இணைந்து அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் கண்காட்சியை நடத்தியது.

இதில் நாடு முழுவதும் உள்ள நாய் பிரியர்கள் வளர்ப்பார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு சிறந்த நாய் வகைகள் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நடுவர்களாக சரத் சர்மா, பிரீதம், ரஞ்சித், முன்ஜால் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் டெல்லி, கொல்கத்தா, பூனே, மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாய் வளர்ப்பாளர்கள் அவர்களது நாய்களை அழைத்து வந்து போட்டியில் பங்கேற்க செய்தனர்.

Advertisement

குறிப்பாக கிரேட் டேன், ஜெர்மன் ஷெப்பர்ட், கோல்டன் ரெட்ரீவர்ஸ் லேபர்டார், டச்ஷண்ட் போன்ற வெளிநாட்டு வகை நாய்களும் தமிழகத்தை சேர்ந்த கொம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி போன்ற நாட்டு நாய்களும் இந்த கண்காட்சியில் சிறப்பு துவம் வாய்ந்ததாக அமைந்தது பலரும் இவற்றை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

செல்லப் பிராணிகள் வளர்ப்பை ஊக்குவிப்பது நாய்கள் இனங்களை பறைசாற்றுதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் தலைவர் தனுராய் மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.