போலிசாரிடம் இருந்து தப்பி ஓடிய கைதி…

கோவை: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வந்த போது கர்நாடகா போலீசாரிடம் இருந்து கைதி தப்பி ஓடினார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் மகன் ராகவன். இவர் மீது தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இதில் திருட்டு வழக்கு தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு ராகவன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது வழக்குகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜர்ப்படுத்துவதற்காக ராகவன் கர்நாடகா போலீசார் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் பிறகு ராகவனை நேற்று முன்தினம் இரவு திம்பம், பவானிசாகர், அன்னூர் வழியாக கோவை நோக்கி அழைத்து வந்தனர்.

அப்பொழுது அன்னூர் அருகே பச்சாகானூர் பகுதிக்கு வந்த போது ராகவன் இயற்கை உபாதை செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார். அதை நம்பிய போலீசார் வாகனத்தை நிறுத்தினர். ராகவன் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கைவிலங்குகளை அவிழ்த்து விட்டதாக தெரிகிறது.

அப்பொழுது திடீரென வாகனத்தில் இருந்து குதித்த ராகவன் காட்டுப் பகுதிக்குள் ஓட தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடகா மாநில போலீசார் ராகவனை பிடிக்க துரத்திச் சென்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை, அது இரவு நேரம் என்பதால் ராகவன் வனப்பகுதி வழியாக ஓடித்தப்பினார்.

Advertisement

இது குறித்து புகாரின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதி ராகவனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...