புத்த, சமண, சீக்கிய மதத்தினருக்கு புனிதத் தலங்களுக்குச் செல்ல ரூ.12 லட்சம் நிதியுதவி

கோவை: புத்த, சமண, சீக்கிய மதத்தினருக்கு புனிதத் தலங்களுக்குச் செல்ல ரூ.12 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வசிக்கும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சார்ந்த புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

Advertisement

இதன்படி, புத்த மதத்தைச் சேர்ந்த 50 பேர், சமண மதத்தைச் சேர்ந்த 50 பேர், சீக்கிய மதத்தைச் சேர்ந்த 20 பேர் என மொத்தம் 120 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

புத்த மதத்தினர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர், சாரநாத், வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கும், நேபாளத்தில் உள்ள லும்பினி உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கும் செல்லலாம்.

Advertisement

சமண மதத்தினர் ராஜஸ்தானில் உள்ள சமணக் கோயில்கள், ஜார்க்கண்டில் உள்ள சம்மேத சிகர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிதானா, கர்நாடகாவில் உள்ள சரவணபெலகோலா உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குச் செல்லலாம்.

சீக்கிய மதத்தினர் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம்.

Advertisement

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 31.01.2027 கடைசி நாளாகும். இந்தத் தகவலை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...