நெல் நடவுப் பணியில் வேளாண் மாணவர்கள்- விவசாய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள ஏற்பாடு…

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நெல் நடவுப் பணியில் ஈடுபாடு – விவசாயத் தொழில்நுட்பங்களை நேரடியாகக் கற்றுக்கொள்ள ஏற்பாடு…

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை (மேதமை) மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நெல் சாகுபடி குறித்த நடைமுறைப் பயிற்சி அளிக்கும் வகையில் நெல் நடவு விழா நடைபெற்றது.

Advertisement

பல்கலைக்கழகத்தின் நன்செய் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் நெல் நாற்றுகளை நடவு செய்தனர். வேளாண்மைப் படிப்பில் கற்றுக்கொள்ளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர்களே நேரடியாக நெற்பயிர் சாகுபடி செய்யும் வகையில் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 சென்ட் நிலம் ஒதுக்கப்படும். அந்த நிலத்தில் சேற்றுழவு செய்வது முதல் நெல் நடவு, பயிர் பராமரிப்பு மற்றும் அறுவடை வரையிலான அனைத்து சாகுபடிப் பணிகளையும் மாணவர்களே மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் பொறுப்பு முனைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நெல் நடவுப் பணியைத் தொடங்கி வைத்தார். உழவியல் துறைத் தலைவர் முனைவர் கிருஷ்ணன், மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய பயிர் மேலாண்மை முறைகள் குறித்து விளக்கினார்.

மேலும், முதன்மையர் (வேளாண்மை) பொறுப்பு முனைவர் பாபு, பயிர் மேலாண்மை இயக்குநரக இயக்குநர் பொறுப்பு முனைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து வயலில் நெல் நடவுப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பாடப்பேராசிரியர்கள் முனைவர் சிவகுமார், முனைவர் ரமா, முனைவர் சக்திவேல், முனைவர் பிரபுகுமார், முனைவர் சங்கீதா, அஜித், முனைவர் சிவமுருகன் மற்றும் முனைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...