கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் குற்றச்சாட்டு! தவெக நகரச் செயலாளர் பிரகாஷ் நிரந்தர நீக்கம்!

கோவை : கோவையில் தவெக வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷ் மீது பெண் முன்வைத்த புகாரைத் தொடர்ந்து, அவரைக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி தவெக வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருபவர் மகாராஜன். இவரது மனைவி திவ்யா. இவர்கள் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

Advertisement

குறிப்பாக, கட்சியில் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது பிரகாஷ் தகராறில் ஈடுபட்டதாகவும், தனது மனைவியிடம் பிரகாஷ் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மகாராஜன் வேதனை தெரிவித்திருந்தார்.

Video

இதனிடையே, பிரகாஷ் தனது ஷோரூமுக்கு வந்து பேண்ட் ஜிப்பைக் கூட போடாமல் தனது முன்னால் அமர்ந்திருப்பதாகக் திவ்யா குற்றம்சாட்டினார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து, தங்களைக் குறிவைத்துப் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதாகக் கூறிய திவ்யா, தங்களை நிம்மதியாக வாழ விடுமாறு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.

பெண் தொழிலதிபர் மற்றும் அவரது கணவர் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

Advertisement

இந்த நிலையில், சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி, அக்கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...