கோவை: கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு போலிசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தப்பதேதி வந்த இருவரை மதுவிலக்கு போலிசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சா கடத்தல் குறித்து மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உக்கடம் வாலாங்குளம் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை நிறுத்தி சோதனையிட்டனர் . அதில் 21 கிலோ கஞ்சா மூட்டை இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவை பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் வீர சின்ன மருது என்பது தெரியவந்தது. அதனையடுத்து இருவரையும் போலீசார் பிடித்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வேறு ஏதாவது வாகனத்தில் கஞ்சா கடத்தினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் , ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இருவரும் இணைந்து ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியில் இருந்து 21 கிலோ கஞ்சாவை வாங்கி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மணிகண்டன்,
வீரசின்னமருது ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் , கஞ்சா கடத்த பயன்படுத்தபட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.





