கோவை: கோவை சத்தி சாலையில் நேர்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் மேலும் காரில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அன்னூர் பகுதியை சேர்ந்த ஹரி சங்கர்(28) என்பதும் டிரைவராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
தற்பொழுது அந்த விபத்தில் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ள நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தமிழரசனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தின் சிசிடிவி காட்சிகள்: https://youtu.be/QqgQZMLUwAshttps://youtu.be/QqgQZMLUwAs


