உள்ளாடைக்குள் 2.5 கோடி மதிப்பு தங்கம்- கோவையில் சிக்கிய இருவர்…

கோவை: உள்ளாடைக்குள் 2.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகள் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த இரு பயணிகள், தங்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து எடுத்து வந்த ரூ.2.47 கோடி மதிப்பிலான தங்கத்தை மீட்டுச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் (Scoot Airlines) சர்வதேச விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானப் பயணிகளை, மத்திய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு தீவிரமாகக் கண்காணித்துச் சோதனை செய்தனர்.

​அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேசவன் என்பவரை அதிகாரிகள் தனியறைக்கு அழைத்துச் சென்று முழுமையாகச் பரிசோதித்தனர். அதில், அவர் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்த 835 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைக் கண்டறிந்த அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரம் ஆகும். இதனைத் தொடர்ந்து, அதே விமானத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் வேலம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் ரங்கசாமி என்பவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். அவரும் தனது உள்ளாடைக்குள் 736 கிராம் எடை உள்ள தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டித் துண்டுகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரம் ஆகும்.

​இதன் மூலம் இருவரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,571 கிராம் ஆகும். இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 48 லக்‌ஷம் (ரூ.2.47 கோடி) என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இருவரையும் உடனடியாகக் கைது செய்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

​நீதிமன்ற உத்தரவின்படி, வெளிநாட்டவரான கேசவன் சென்னை புழல் சிறையிலும், தஞ்சாவூரைச் சேர்ந்த வீரப்பன் ரங்கசாமி கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் யாருக்காகத் தங்கத்தைக் கடத்தி வந்தார்கள்? பின்னணியில் இயங்கும் சர்வதேசத் தங்கக் கடத்தல் கும்பல் எது? என்பது குறித்துச் சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி! சிக்கிய நபரை மரத்தில் கட்டிய பொதுமக்கள்

கோவை மதுக்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...