கோவை இஸ்கானில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கோலாகலம்…

கோவை: கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Advertisement

இன்று கிருஷ்ணர் பிறந்த தினம். இதனை கிருஷ்ண ஜெயந்தியாகவும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியாகவும் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா அருகில் உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதிகாலை முதல் சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், கிருஷ்ண நாமங்கள் பாடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் பலராமர், சுப்த்ரா, கிருஷ்ணன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளினர்.

Advertisement

பக்தர்கள் அனைவரும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற பக்தி முழக்கங்களுடன் கோவில் முழுவதும் சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.

தரிசனம் செய்ய வந்த பல்வேறு பக்தர்கள் அவர்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேடமிட்டும் அழைத்து வந்து தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை கலச அபிஷேகம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற உள்ளது.

Advertisement

அதுமட்டுமின்றி இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...