இன்றைய ராசிபலன் | horoscope today

இன்றைய ( 27.4.2026) ராசிபலனை இந்த தொகுப்பில் காணலாம்

மேஷம்
நீண்ட நாள் கனவுகள் நனவாகும் இனிய நாள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய நட்பு வட்டம் உருவாகும். மாலை நேரத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

Advertisement

மிதுனம்
பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பிறக்கும் நாள். எதிர்ப்புகள் விலகி காரிய சித்தி உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆன்மீக பயணங்களுக்கான திட்டமிடல் நடக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

கடகம்
விடாமுயற்சியால் காரியங்களை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும்.

சிம்மம்
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையத் தொடங்கும். நீண்ட தூர பயணங்களால் ஆதாயம் உண்டு. சுப செய்திகள் வந்து சேரும். பழைய கடன்களை அடைக்கும் சூழல் உண்டாகும்.

NCC News Rasipalan today
NCC News

கன்னி
சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். நிலம் மற்றும் சொத்து ரீதியான பிரச்சனைகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.

துலாம்
மனதில் புதுவிதமான உற்சாகம் மேலோங்கும் நாள். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதாக கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவியின் மூலம் பொருளாதார ரீதியான உதவி கிடைக்கும். சேமிப்பு உயரும் நாள்.

விருச்சிகம்
தைரியத்துடன் செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி காணப்படும். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு
பொருளாதார ரீதியாக ஏற்றமான சூழல் நிலவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் தீரும். சகோதர வழியில் அனுகூலம் உண்டாகும். வீடு மாற்றும் எண்ணம் கைகூடும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். வரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் அதீத விழிப்புணர்வு தேவை. புதிய முயற்சிகள் மற்றும் முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது சிறப்பாகும். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காக்கவும். இறை வழிபாடு தைரியத்தை தரும்.

கும்பம்
புதிய சிந்தனைகள் வெற்றியைத் தேடித்தரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய சாதகமான சூழல் உள்ளது. உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பிள்ளைகளால் பெருமை சேரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும் நாள் இதுவாகும்.

மீனம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடினாலும் திறம்படச் செய்வீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நீண்ட கால முதலீடுகள் நல்ல பலன் தரும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகன பயணத்தில் நிதானம் தேவை.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இன்றைய ராசிபலன் | Horoscope Tamil

மார்ச் 28 ராசிபலன் அனைத்து 12 ராசிகளுக்கும் முழு பலன்கள் வெளியானது சந்திராஷ்டமம் காரணமாக கும்பம் ராசிக்காரர்கள் கவனம் அவசியம்

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...