கோவையில் ஓட்டுநர் உரிமம் இன்றி கனரக வாகனத்தை இயக்கிய இளைஞருக்கு ரூ.10,000 அபராதம்!

கோவை: வடவள்ளி–கணுவாய் சாலையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கனரக வாகனத்தை இயக்கிய 20 வயது இளைஞருக்கு கோவை மாநகர காவல்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை வடவள்ளி–கணுவாய் சாலையில் சிறுவன் ஒருவன் கனரக வாகனத்தை இயக்கிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனைப் பார்த்த பொதுமக்கள், ஓட்டுநர் உரிமம் பெறும் வயதைக்கூட எட்டாத சிறுவன் கனரக வாகனத்தை இயக்குவதாகக் கருதி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

Advertisement

இதையடுத்து, வைரலான வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீடியோவில் கனரக வாகனத்தை இயக்கியது சிறுவன் அல்ல, 20 வயதுடைய இளைஞர் என்பது தெரியவந்தது.

மேலும், அந்த இளைஞரிடம் கனரக வாகனத்தை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கனரக வாகனத்தை இயக்கிய இளைஞருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து கோவை மாநகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஓட்டுநர் உரிமம் இன்றி கனரக வாகனங்களை இயக்குவது சாலைப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

போதை இல்லாத இந்தியா- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்கம்

கோவை: போதை இல்லாத இந்தியாவை உருவாக்க பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோயமுத்தூர் வழக்கறிஞர் சங்கம் முன்னெடுப்பு. கோவை நீதிமன்ற வளாகத்தில், கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து,...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...