ஜெர்மனியில் சர்வதேச உலோகத்துறை கண்காட்சி- இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு…

கோவை: அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேச உலோகத்துறை கண்காட்சிக்கு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

2027ம் ஆண்டு ஜூன் மாதம் 21 முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் The Bright World Of Metals 2027 சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை கொடிசியாவில் நடைபெற்றது இதில் செய்தியாளர்களை சந்தித்த இந்த நிகழ்வின் நிர்வாகிகள் Andre Kilmm, Malte Seilert, Till Schreiter ஆகியோர் இதில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் உலோகத்துறை சம்பந்தமான கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளனர் என்றும் அது மட்டும் இன்றி உலோகத்துறை சார்ந்த கருத்தரங்குகளும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதில் இந்த துறையின் தற்போதைய நிலை குறித்தும், துறை சந்திக்கும் சவால்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக குறிபிட்டனர். மேலும் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

இதில் உலக நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இந்த துறை சார்ந்து பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் பொருளாதார நடமுறைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டனர். பொதுமக்களும் கண்காட்சிக்கு வருகை புரிந்து இந்த துறை சார்ந்து பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் இதில் பங்கேற்க வரும் பங்கேற்பாளர்கள் கண்காட்சிக்கு வருகை புரியும் பொதுமக்கள் அனைவரும் எளிய வழியில் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வருகை புரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். இதற்கு இந்திய நிறுவனங்களுக்கும் அனுப்பி விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள்
https://www.gifa.com/gifa online application

https://www.metec-tradefair.com/metec online application

https://www.thermprocess-

online.com/thermprocess online application

https://www.newcast.com/newcast online application

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...