கோவை: அதிகாரிகள் வராமல் தவெக கட்சிக்காரர்களே அணையை திறப்பது சரிதான் அதில் தவறு இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை டாடாபாத் பகுதியாக தேன் சிட்டு என்ற அமைப்பு சார்பில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதனை மதிமுக பொதுசெயலாளர் வைகோ துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களைவிட பேசும்போது அவர் மிகவும் கடுமையாக கடிந்து கொண்டார். செய்தியாளர்கள் விமான நிலையம் வருவீர்கள் என்று எண்ணினேன் ஆனால் இங்கு வந்துள்ளீர்கள் எனவே நான் தற்போதைக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்று முதலில் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையம் வருகிறார் என்றால் நீங்கள் வேண்டுமென்றால் அங்கு போய் எடுத்து க் கொள்ளுங்கள் அவர் முதலமைச்சராக இருந்தவர் ஒரு ஞானி நான் எல்லாம் சிறிய ஆள்தான் உங்கள் நேரத்தை அங்கேயே செலவழித்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
என்னை விட செய்தியாளர்களை மதிப்பவர்கள் தமிழ்நாட்டிலேயே யாரும் இல்லை என்றும் இரிடேட் கேள்விகளை கேட்டால் கூட பொறுமையாக பதில் சொல்பவன் நான். என்னுடைய செய்தியை மற்ற மாவட்ட பத்திரிக்கையாளர்கள் எல்லாம் போட மாட்டார்கள் கோவை பத்திரிகையாளர்கள் தான் ஓரளவு போடுவார்கள் என்றார்.
எங்கள் கட்சியிலேயே ஒருத்தர் இருந்து எங்களால் வாழ்வு அளிக்கப்பட்டு 5 முறை எம்எல்ஏ பதவிக்கு நிற்கவைக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே யாரும் செலவழிக்க முடியாத பணத்தை செலவழித்து ஒன்றுமில்லாத வரை மாநில இளைஞரணி செயலாளர் வரை ஆக்கி துணைப் பொதுச் செயலாளர் ஆகிய பிறகு வைகோ திமுகவில் வடிவேல் என்று ஒரு அழகான பட்டத்தை எனக்கு அளித்து இருக்கிறார் எனக்கு பல பேர் பல பட்டங்களை கொடுத்துள்ளார்கள் ஆனால் இவ்வளவு சிறப்பான பட்டம் எனக்கு கிடைத்தது இல்லை எனவே அவரது கருத்துக்கே நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று (மல்லை சத்யாவை) பெயர் குறிப்பிடாமல் கூறினார்.
பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். நேற்றைய தினம் வி எஸ் பாபு இரங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய் பார்த்திபனை நீங்கள் திட்டியதாக பரப்பப்படும் தகவல் தொடர்பான கேள்விக்கு விஜய் பார்த்திபனா? அவர் அமைச்சரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது நாங்கள் ஒழுங்காக சென்று கொண்டிருக்கும் பொழுது என்னை பின்னே இழுத்தார் முதல்வரை ஒழுங்குபடுத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தேன் அவர் மீது ஒரு துரும்பு கூட விழக்கூடாது என்று அழைத்துச் சென்று கொண்டிருந்தேன் நான் கொடுக்கின்ற பாதுகாப்பு 100 பேர் கூட கொடுக்க முடியாது கலைஞருக்கே பாதுகாப்பு கொடுத்தவன் நான் அவர் அமைச்சரா என்று எனக்குத் தெரியாது அப்படி இருக்கும் பொழுது முதலமைச்சர் என்னிடம் நீங்கள் நடப்பீர்களா என்று கேட்டார் நான் 30 கிலோமீட்டர் இப்பொழுது கூட நடப்பேன் நான் ஒரு கிராமத்துக்காரன் என்று கூறி அழைத்துச் சென்றேன் அப்பொழுது தேவையில்லாமல் ஒரு ஆள் பின்னே இழுத்தார் அவர் யார் என்று எனக்கு தெரியாது அப்பொழுது உன் வேலையை பார்த்துட்டு போ என்று நான் கூறினேன் நான் யாரையும் திட்டவில்லை என்று தெரிவித்தார்.
சில திமுக நிருபர்கள் இதனை விமர்சனமாக போடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். பொய் சொல்வதற்கு பத்திரிக்கையாளர்களுக்கும் செய்தி நிருபர்களுக்கும் அளவே கிடையாது என்று சாடினார்.
ஒரு அமைச்சரை கைநீட்டி பேசியது சர்ச்சையாகி உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு வைகோ ஒருமையில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது குறுக்கே பேசுவாயா? என்று கோபம் உற்றார். அப்பொழுது அங்கிருந்த நிருபர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் விதம் என்று ஒன்று உள்ளது அல்லவா என்று வைகோவிடம் கூறிய பொழுது பத்திரிகையாளர்களை என்னைவிட மதிப்பவர்கள் யாரும் கிடையாது என்று தெரிவித்தார்.
அஞ்சலி நிகழ்வில் அனைவரும் ஒன்றாக சென்று கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருவர் கையை பிடித்து இழுத்தால் உன் வேலையை பார் என்று கூறினேன் இதில் என்ன தவறு உள்ளது. அரசியலில் இதெல்லாம் ஒரு தவறான விஷயமா?
மேலும் செய்தியாளர்களை பார்த்து நீங்கள் எல்லாம் திட்டமிட்டு திமுகவின் ஏஜெண்டுகளாக வந்துள்ளீர்கள் என்று கூறினார். திமுகவை தலைமேல் தூக்கி வைத்த தலைவர்களில் உங்களை விட வேறு யாரும் இல்லை என்று செய்தியாளர்கள் எதிர் கேள்வி கேட்ட பொழுது அப்படி இருந்த என் மேல் பழி போட்டார்கள் திராவிட இயக்கத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சொல்லி சென்றோம் ஆனால் எங்களை அவமானம் செய்தார்கள் கட்சிகளே இல்லாத கட்சிகளுக்கெல்லாம் அதிக சீட்டுகள் கொடுக்கப்பட்டது புண்படுத்தப்பட்ட பிறகு ஒட்டுமொத்த முடிவாக நாங்கள் வெளியேறினோம் என்று தெரிவித்தார்.
என்னைப் பற்றி விமர்சனமாக செய்தியில் போட வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள் போட்டுக் கொள்ளுங்கள் I don’t Care என்னுடைய இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் எதிர்கொள்ளாத விமர்சனங்களால் அத்தனை விமர்சனங்களையும் நான் தாண்டி தான் வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
முதலமைச்சரை அஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் என்னை அவருடனேயே என்னை அழைத்தார் முதலமைச்சர் என்னை அழைத்ததால் தான் நான் அவருடனே சென்றேன் இதை சகித்துக் கொள்ள முடியாத திமுக வட்டாரத்தினர் அதற்கு எதிராக பேசுகிறார்கள் என்று தெரிவித்தார். கூட்டத்தில் முதலமைச்சரையே தள்ளி விடுவது போல் இரண்டு பேர் வந்தால் மெய்காப்பாளன் வேலையை நான் செய்வேன் முதலமைச்சரை அவர்கள் தள்ளி விடுவார்கள் என்றால் நானே அவர்களை தள்ளி விட்டு விடுவேன் ஒவ்வொரு தலைவருக்கும் நான் பாதுகாப்பாளராக இருந்துள்ளேன். வாஜ்பாய்க்கும் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் கூட பாதுகாப்பாளராக இருந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
முதலமைச்சரை வைகோவை 12 கிலோமீட்டர் கையைப் பிடித்து அழைத்துச் சென்றதால் காந்தாரி வயிறு எரிந்தது போல (பொச்செரிச்சல்) என்ற வார்த்தையை குறிப்பிட்டு திமுக மீது உள்ள விமர்சனங்கள் குறித்து ஏதாவது கேள்விகள் எனப்பட்டதா என்று கோபமுற்றார்.
இந்தியாவிலேயே சிறப்பான கல்யாண மண்டபம் சென்னையில் உள்ள பொழுது கிரீஸ் நாட்டிற்குச் சென்று கல்யாணம் செய்துள்ளார்கள் ரஜினிகாந்த் என்ற மாமனிதன் 1996 அரசியலில் என்ன சொன்னார் என்று நான் சொல்லட்டுமா ஆனால் இரண்டு நாட்களாக என்னை அதை பற்றி சொல்ல வேண்டாம் என்று எனனிடம் கெஞ்சி கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அந்த கல்யாணத்திற்கு வந்த அனைத்து முக்கியஸ்தர்களும் விமான நிலைய டிக்கெட்டுகள் எடுத்து பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து எத்தனை ஆயிரம் கோடி செலவு அளித்தீர்கள் இதனை பற்றி யாராவது கேள்வி எழுப்பினீர்களா என்று கூறினார். அவர்கள் அரசியலில் உள்ளதால் நான் இதைப் பற்றி கேட்கிறேன் என்றும் சினிமா மட்டும் அவர்கள் இருந்திருந்தால் நான் இதைப் பற்றி பேசி இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இவர்கள் ஆட்சியில் நடந்த கொலை கொள்ளைகள் கற்பழிப்பு சம்பவங்கள் என்கவுண்டர்கள் என 1991ல் இருந்து ஸ்டாலின் ஆட்சி முடியும் வரை உள்ள க்ரைம் டேட்டா நான் எடுத்து வைத்துள்ளேன். அதை நான் அனைத்து செய்த நிறுவனங்களுக்கும் கொடுத்து இருக்கிறேன் அரசு துறைக்கும் கொடுத்திருக்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி கூட ஆட்சி நன்றாக இருக்கிறது என்று கூறி அனைத்து அரசுகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையை அசாஸ்டர் ஆக்கி கூலிப்படையாக்கி 16 பேரைச் சுட்டுக் கொன்றார் என்று தெரிவித்தார். பணத்திற்காக நடத்தப்பட்ட அந்த படுகொலையில் காவல்துறை கூலி வேலை செய்தது மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம் என்று தெரிவித்தார். 36 ஆண்டுகால குற்ற சம்பவங்களை நான் தொகுத்து வைத்திருக்கிறேன் என்றும் எந்த மேடையிலும் அதைப் பற்றி பேசுவதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார். என்னுடன் சறுக்கி சமமாக வாதிட எந்த மேடைக்கும் அவர்களது கட்சி ஜாம்பவான்கள் வரலாம் எந்தெந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டது என்று என்னிடம் டேட்டா உள்ளது என்றும் கூறினார்.
என்னை வடிவேலு என்று விமர்சித்தது அது தொடர்பாக பேசிய அவர் வடிவேலு ஒரு தமிழன் தானே என்றும் வடிவேலு சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்தார் அவரது படம் இல்லை என்றால் படமே ஓடாது என்ற நிலையெல்லாம் இருந்தது பிறகு திமுகவினர் அவர்களுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்யுங்கள் அதிக படங்கள் உங்களுக்கு தருகிறோம் என்று என்று கூறி ஏமாற்றி படங்களை இல்லாமல் விஜயகாந்தை அட்டாக் செய்ய வைத்து பேச வைத்து சினிமா துறையில் ஒரு வெறுப்பை ஏற்படுத்தி தேர்தலுக்குப் பிறகு வடிவேலுவை கழுத்தறுத்துக் கொண்டு வந்து பயன்படுத்தி ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்று தெரிவித்தார். வடிவேலுவின் வாழ்வை நாசமாகியவர்கள் திமுகவினர் என்று சாடிய அவர் என்னை வடிவேலு என்று கூறுவது பொருத்தமானது தான் ஏனென்றால் அவரையும் நம்பி அழைத்து வந்து தெருவில் விட்டு விட்டீர்கள் அதேபோன்றுதான் என்னையும் செய்து விட்டீர்கள் என்று கூறினார்.
Press Planed Prepared Question by DMK என்ற செய்தியாளர்களை பார்த்து கூறினார் அப்பொழுது மொத்தமாக அனைத்து பத்திரிக்கையாளர்களையும் அவர் கூறாதீர்கள் என்று செய்தியாளர்கள் கருத்து தெரிவித்ததற்கு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்று கூறினார். செய்தியாளர்கள் நீங்கள் திட்டமிட்டு திமுக ஏஜென்ட் ஆக வந்து கேள்வி கேட்கிறீர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் நீங்கள் திமுகவால் நூற்றுக்கு நூறு குடம் போட்டு எடுக்கப்பட்ட ஏஜெண்டுகள் என்று சாடினார். திமுக மீது உங்களுக்கு வெறுப்பு இருக்கலாம் என்று செய்தியாளர்கள் எதிர் கேள்வி கேட்ட பொழுது திமுகவை வளர்த்தவன் நான் திமுகவிற்காக 25 முறை சிறைக்குச் சென்றவன் நான் திமுகவிற்காக உயிரை கொடுத்தவன் உங்களுக்கு திமுகவின் வரலாறு தெரியாது என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு தொடர்பான கேள்விக்கு அந்த தீர்ப்பு மிகவும் மனதை காயப்படுத்துகிறது திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு பகுதியில் தர்கா வைத்துள்ளார்கள் இத்தனை ஆண்டு காலம் இல்லாத ஒரு புதுமையாக நீதி அரசர்கள் சமூக ஒற்றுமை குறித்த சிந்தனை சிறிதும் இல்லாமல் நீதி அரசர்கள் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை கொடுத்தது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்தார். இது மைனாரிட்டி மக்களின் மனதை காயப்படுத்தும் செயல் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் திமுக ஆட்சியில் சாத்தான்குளம் விவகாரம் நடைபெற்றது என்று தவறாக குறிப்பிட்டார். மேலும் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று பட்டியலிட்டார்.
தமிழக அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது சவுண்ட் எல்லாம் இங்கு விடக்கூடாது என்று கைநீட்டி மெதுவாக கேட்க வேண்டும் என்று எச்சரிக்கன் வகையில் பேசி மேல்முறையீடு போக வேண்டிய நேரத்தில் போவார்கள் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஸ்டாலின் ஆட்சியில் பன்னீர்செல்வம் ஆட்சியில் கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பயங்கரமான நிலைக்கு பாலானது ஆனால் தற்பொழுது உள்ள அரசிடம் வேண்டுமென்றால் ஒப்பிட்டு பாருங்கள் யார் காலத்தில் சட்டம் ஒழுங்கு கேட்டது என்று நான் கூறுகிறேன் என்று சவால் விட்டார்.
அண்ணாமலை கடந்த 9 மாதங்களில் லாக் அப் டெத் நடந்துள்ளது பற்றி பேசியது தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை போலீஸ் ஆபீஸராக இருந்து பாரதிய ஜனதா கட்சியில் பெரிய லீடர் ஆகி திடீரென ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார் அவர் நன்றாக இருக்கட்டும் அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று கூறினார்.
மதிமுகவை கரைத்து விடுவார்கள் என்று திமுகவினர் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு யோகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்பீர்களா எங்கள் கட்சியை யாராலும் கரைக்க முடியாது என்று தெரிவித்த அவர் எம்ஜிஆரை தவிர விஜய் ஒருவரை தவிர எங்கள் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று கலைஞர் தலைகீழாக நின்றார் ஆனால் அது நடக்கவில்லை அது நடக்கவும் நடக்காது இன்னும் வேறு கொண்டு எங்கள் கட்சி எழும் என்று தெரிவித்தார்.
மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை அதற்கு உரிய விதத்தில் போராடுவோம் ஆட்சியாளர்களிடமும் இதைப்பற்றி பேசியிருக்கிறோம் என்று கூறிய அவர் இந்த விவகாரத்தில் முதல் முதலில் போராடியது எங்கள் கட்சி தான் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று என் அளவிற்கு போராடிய தலைவர்கள் யாராவது ஒருவரை கூறுங்கள் பார்க்கலாம் மேகதாதுவை எதிர்த்து ஊரு ஊராகச் சென்று இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மல்லை சத்தியா குறித்தான கேள்விக்கு முட்டாள்களின் பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறினார்.
தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய முதலீடுகள் ஆந்திராவிற்கு செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுவது தொடர்பான கேள்விக்கு ஆந்திராவிற்கெல்லாம் ஒன்றும் செல்லவில்லை இதைவிட ஸ்டாலின் ஆட்சியிலும் கருணாநிதி ஆட்சியிலும் அதிகமாக சென்றது என்று தெரிவித்தார். தமிழக அதிகாரிகள் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை பத்திரப்பதிவுத்துறை ஆசிரியர்கள் துறை செவிலியர்கள் துறை போக்குவரத்து துறை காவலர்கள் துறையில் வழக்கமாக வந்த கஜானா விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் தடை பற்று விட்டது என்று ஒரு சில அரசு அதிகாரிகள் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று தெரிவித்தார். அதிகம் காசு வாங்கி பழக்கப்பட்டு போன அதிகாரிகள் இந்த அரசுக்கு உதவி செய்யாதது மட்டும் அல்லாமல் அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
ஸ்டெர்லைட் அணில் அகர்வால் முதல்வரை பார்க்க வேண்டும் என்று எண்ணினார் ஆனால் முதல்வர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை இதைவிட விஜயின் நேர்மை என்ன இருக்கிறது என்று தெரிவித்தார். செய்தியாளர்கள் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இந்த ஒரு கருத்தை தைரியமாக பதிவிடுங்கள் என்றும் கூறினார்.
உலகக் கோடீஸ்வரர்கள் அனைத்து அரசுகளையும் வளைக்க முடிந்தது ஆனால் இந்த அரசை நெருங்க கூட முடியவில்லை என்று தெரிவித்தார்.
தேனி மாவட்டம் சோத்து பாறை அணையை தமிழக வெற்றி கழகத்தினரே தாமாக திறந்து வைத்தது சர்ச்சை ஆகி உள்ளது தொடர்பான கேள்விக்கு அங்கு தேவை இருந்திருக்கும் அதனால் திறந்து வைத்திருப்பார்கள் அது சரிதான் அதிகாரிகள் திறந்து வைக்க வராததால் உள்ளூர் விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று திறந்து வைத்திருப்பார்கள் அதில் ஒரு தவறும் கிடையாது முறையான அறிவிப்பு செய்வதற்கும் நேரம் கிடையாது என்று கூறினார்.


