கோவை: இன்று சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ள 80ஸ் போட்டோ டிரெண்டிங்கும், அதுபற்றி 80ஸ் கிட்ஸ்கள் சொல்வது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
தொலைந்த விஷயங்கள்…
நாம் வாழ்ந்து வரும் இந்த உலகம், தொழில்நுட்ப வளர்ச்சிகளால் நாளுக்கு நாள் அதிநவீனமயமாகிக் கொண்டே செல்கிறது. சில விஷயங்களைக் கடந்து வந்தது நிம்மதி அளித்திருக்கலாம். அதேவேளையில், பல விஷயங்களை நாம் அனுபவிக்காமல் கடந்து விட்டோமே என்று ஏக்கம் கூட அடையலாம். இப்படிப்பட்ட சூழலில், கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிற்க வைப்பது தான், இந்த அசாதாரண சக்தி எனப்படும் ஏ.ஜ.,.

நீங்கள் என்ன கேட்டாலும் சொடக்கு போடும் நேரத்தில் உங்கள் கண்முன்னே கொண்டு வரும் இந்த ஏஐ தொழில்நுட்பம், நாம் இழந்தவற்றையும், நாம் சந்திக்கப் போகும் எதிர்காலத்தையும் தத்ரூபமாக தருவதில் மிகவும் வல்லமை வாய்ந்ததாகும்.
ஏஐ ராஜ்ஜியம்
நமக்கு தேவைப்படும் தகவல் குறித்த தரவுகளை பதிவிட்டால், அது பற்றிய தகவல் விளாவாரியாக கொடுப்பதுடன், நாம் கேட்கும் போட்டோக்களையும் இந்த ஏஐ தொழில்நுட்பம் துல்லியமாக தருகிறது. அது தொடர்பான ப்ராம்ப்ட் (PROMPT) மட்டும் சரியாக கொடுத்தால், நீங்கள் எதிர்பார்க்கும் போட்டோக்களை கொடுப்பதால், சாட் ஜிபிடி (ChatGPT), ஜெமினி (Gemini) போன்ற ஏஐ செயலிகள் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளன.

இதனை பயன்படுத்திக் கொண்ட ஏஐ நிறுவனங்கள், அடிக்கடி போட்டோ டிரெண்டிங்கை அறிமுகம் செய்து வருகின்றன. நமது போட்டோ கொடுத்தால், கார்ட்டுன் போன்றும், வயதான தோற்றத்தையும், குழந்தை போன்ற தோற்றத்தையும் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளது. அப்படித்தான், கடந்தாண்டு ஏ.ஜ., தொழில்நுட்பத்தின் மூலும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் ‘ஜிப்லி (Ghibli) அனிமேஷன் பில்டர்’-ஐ பயன்படுத்தி, கார்ட்டூன் போட்டோக்கள் உருவாக்கப்பட்டு, டிரெண்டானது. நெட்டிசன்களும் தங்களது போட்டோக்களை பயன்படுத்தி, ஜிப்லி கார்ட்டுன் டிரெண்டிங்கில் இணைந்தனர்.
கவரும் 80ஸ்
இதன் தொடர்ச்சியாக, தற்போது 80ஸ் போட்டோ டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 80ஸ் காலகட்டத்தில் நம், அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணன், அண்ணி, மாமா, அத்தை போன்றோரின் ரெட்ரோ பேஷன், லாங் ஹேர் ஸ்டெயில், கேஸட் டேப்புகள், ப்ரீ சைஸ் ஷர்ட் மற்றும் பெல்ஸ் பேன்ட் போன்ற ஸ்டெயில்கள் இன்று வரையிலும் நம்மை கவர்ந்திருக்கும். என்னதான், அதுபோன்ற டிரெஸ்களை தற்போது வாங்கி அணிந்தாலும், அந்த காலகட்டத்தில் நம் 80ஸ் உறவுகளின் டிரெண்டிங்கிற்கு ஈடு கொடுக்க முடியாது.

டிரெண்டிங்
இப்படிபட்ட சூழலில் தான், 80ஸ் போட்டோ டிரெண்டிங் தற்போது டிரெண்டாகி வருகிறது. 80ஸ்களில் வெளியான திரைப்படங்களின் கதாபாத்திரங்கள், டேமேஜ் ஆன ஆல்பங்களில் இருக்கும் மறக்க முடியாத போட்டோக்கள், விண்டேஜ் ஸ்டுடியோ போட்டோக்கள் போன்ற போட்டோக்களை உருவாக்கி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
பிரபலங்கள்
இந்த டிரெண்டிங்கில் நெட்டிசன்கள் மட்டுமல்லாது, சினிமா நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என பலரும் இணைந்து வருகின்றனர். நடிகைகள், த்ரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன், மீனாட்சி சவுத்ரி, ப்ரீத்தி முகந்தன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஜெபஸ்டின், நிக்கி கல்ராணி, பார்வதி நாயர், ப்ரியா வாரியர், அதுல்யா ரவி, பாவனா, சாக்ஷி மாலிக், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் இந்த டிரெண்டிங்கில் இணைந்து, தங்களின் சமூக வலைதளப்பக்கங்களில் 80ஸ் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் கிரிக்கெட்டில் நம் எல்லோருக்கும் பிடித்தமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸூம் இந்த டிரெண்டிங்கில் இணைந்துள்ளது. ருத்துராஜ் கெயிக்வாட், ஆயுஷ் மாத்ரே மற்றும் பிரேவிஷ் ஆகியோரின் போட்டோக்களை 80ஸ் லுக்கில் ஏஐ மூலம் ஜெனரேட் செய்து சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கியுள்ளது. இதனை பார்க்கும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் மற்றும் பிரபலங்களின் போட்டோக்களை இந்த டிரெண்டிங்கில் இழுத்து விட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ‘ADD YOURS’ என்ற ஸ்டிக்கர் மூலம் இந்த டிரெண்ட் மேலும் மேலும் விரிவடைந்து வருகிறது.
எப்படி?
சரி, இந்த டிரெண்டிங்கில் நாம் இணையாமல் இருக்கலாமா? என்று நினைப்பவர்களுக்கு, 80ஸ் லுக்கை எப்படி உருவாக்குவது என்பது குறித்த தகவலை பார்ப்போம்.
- ஏ.ஐ., செயலியான சாட் ஜிபிடியில் சென்று Chat box-ஐ ஒபன் செய்ய வேண்டும். அதில், ‘I have looked like in the 80s’என்று பதிவிட வேண்டும்.
- அதன்பிறகு, 80ஸ் தோற்றத்தில் உங்களுடைய போட்டோ வேண்டுமெனில், உங்களின் தற்போதைய புகைப்படத்தை பதிவு செய்யுமாறு குறுந்தகவல் வரும். அதைத் தொடர்ந்து, அந்த ‘+’ குறியீட்டை அழுத்தி, அதில் தெரியும் போட்டோ ஆப்சனை தேர்வு செய்து, நம்முடைய போட்டோவை அனுப்ப வேண்டும்.
- பிறகு, 80ஸ் லுக்கிற்கு தேவையான ஹேர் ஸ்டெயில், வாட்ச், செயின் மற்றும் டிரெஸ் ( உதாரணத்திற்கு பெல்ஸ் பேன்ட்) ஆகியவற்றை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். உதாரணமாக 1980s style, retro south Indian aesthetic, vintage look, vintage tamil cinema போன்ற தேர்வுகளை அனுப்பலாம்.
- நமக்கு தேவையான அம்சங்கள் வேண்டுமெனில், அதற்கேற்றாற் போல, பிராம்ப்ட் கொடுத்து, போட்டோக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
சிலாய்க்கும்…
இது ஒருபுறம் இருக்க, ‘இது வெறும் டிரெண்ட் அல்ல… ஒரு சகாப்தம்’ என்று 80ஸ் கிட்ஸ் தங்களின் நினைவுகளை பகிர்ந்தும், புகழ்ந்தும் வருகின்றனர்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் விடுத்துள்ள பதிவில், “80கள் மீண்டும் வந்துவிட்டன… உண்மையைச் சொன்னால், நாங்கள் அதைப் பற்றி குறை சொல்லப் போவதில்லை! பெரிய ஹேர் ஸ்டைல், ரெட்ரோ ஃபேஷன்,
கேஸட் டேப்கள், பழைய கால பைக்குகள், சிந்தசைசர் இசை, நியான் நிறங்கள்.
அதோடு அந்த தனித்துவமான 80களின் ஸ்டைல். நாம் கேட்க வேண்டிய பாடலை எந்த அல்காரிதமும் தீர்மானிக்கவில்லை. முடிவில்லாத ஸ்க்ரோலிங் இல்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் நோட்டிபிகேஷன்களும் இல்லை. நல்ல இசை. தனித்துவமான ஸ்டைல். மனதை நிறைக்கும் அந்த பழைய வைப்ஸ். இன்றைய தலைமுறை இதை ஒரு ட்ரெண்ட்என்கிறது. ஆனால் அந்த காலத்தை வாழ்ந்தவர்களுக்கு தெரியும். அது வெறும் ட்ரெண்ட் அல்ல. அது ஒரு சகாப்தம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2k கிட்ஸ்களுக்கு தெரியுமா? 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையைப் பற்றி என்ற பேச்சு வழக்கமாக இருக்கும். அதேபோலத்தான் இந்த 80ஸூம்…





