திமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன திட்டங்கள் சூலூருக்கு வரும்- பட்டியலிட்ட கனிமொழி…

கோவை: கோவை சூலூரில் பரப்புரை மேற்கொண்ட கனிமொழி திமுக ஆட்சி அமைந்த உடன் எந்தெந்த இந்த தொகுதியில் கொண்டு வரப்படும் என்று பட்டியலிட்டார்.

Advertisement

கோவை சூலூர் பகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தளபதி முருகேசனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

இதில் கனிமொழி உரையாற்றுகையில்,
இந்த கூட்டத்தை பார்க்கும் போது மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட மகிழ்ச்சி கிடைக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகத்தோடு முதலமைச்சரோடு யார் அதிகமாக இருக்கிறார்கள் என்பது இந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது என்றும்
தமிழ்நாட்டுப் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை இந்த கூட்டம் தருகிறது என்றார்.

இந்த ஐந்து ஆண்டு முதலமைச்சரின் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி, ஒவ்வொரு திட்டமும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் என்றார். முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை அளித்தார். அதனால் மாசக் கடைசியில் யாருக்காவது காசு தேவைப்பட்டால் உங்களிடம் வந்து கேட்கும் நிலைமையை உருவாக்கி காட்டியது அந்த திட்டம், பொருளாதார உரிமை என்ன என்பதை அந்த 1000 ரூபாய் சொல்லியது என்றார். புதுமைப் பெண் திட்டமும் பெண்களுக்காகவே முதல் முதலாக கொண்டுவரப்பட்டது, எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை மாற்றிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறினார்.

Advertisement

பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி, மீண்டும் திராவிட மாடர் ஆட்சி வரப் போகிறது, காலை உணவு திட்டம் எட்டாவது வகுப்பு வரை நீடித்து தரப்படும் என்றார். 20 லட்சம் விவசாயிகளுக்கு எந்த ஒரு மின்சார மோட்டார்கள் பொருத்தப்படாத மின் மோட்டார்கள் வழங்கப்படும், புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது அடுத்த ஆட்சியில் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிள்ளைகள் கனவு காணலாம் ஆனால் எத்தனை பேரால் அது சாதிக்க முடிந்தது? ஆனால் தற்பொழுது இந்தப் பகுதியிலேயே நான்கைந்து பிள்ளைகள் யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்கள் அதற்குக் காரணம் நான் முதல்வன் திட்டம் தான் என்றார்.

Advertisement

நமக்கு எதிராக ஒரு கூட்டணி உள்ளது,
அது எப்படிப்பட்ட கூட்டணி என்று உங்களுக்கும் தெரியும்.
மூன்று மொழி படிக்க வேண்டும், ஹிந்தி மொழி படிக்க வேண்டும்
அப்பொழுதுதான் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய மோடி வழங்க வேண்டிய நிதியை கொடுப்பேன் என்பார்கள் என்றும் ஹிந்தி படிக்கவில்லை என்பதற்காக கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளார்கள் என்றார். அவர்களுக்கு நம் வீட்டு குழந்தைகள் மீது அக்கறை உள்ளதா? இல்லை என்றும் தமிழ்நாட்டிற்கான நிதியையும் திட்டத்தையும் கொடுப்பதில்லை
, மக்கள் தொகை குறைவாக உள்ள மாவட்டங்கள் மாநிலங்களுக்கு எல்லாம் மெட்ரோ ரயில் கொடுக்கிறார்கள் ஆனால் கோவைக்கு தருவதில்லை என்றார்.

100 நாள் வேலை திட்டம் என்பதை நிறுத்திவிட்டு தற்பொழுது எங்கு எத்தனை பேருக்கு வேலை தர வேண்டும் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து விட்டார்கள், அதனை எதிர்த்தவர் நம்முடைய முதலமைச்சர் ஆனால் அதனை ஆதரித்தது எடப்பாடி பழனிச்சாமி என்றார். 100 நாள் வேலைக்கு 150 நாள் ஆக உயர்த்துவேன் என்று கூறுகிறார்கள் ஆனால் 100 நாள் வேலைக்கு உங்களால் குரல் கொடுக்க முடியவில்லை (எடப்பாடி பழனிச்சாமி) என்றார்.

அதிமுக உங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த எதையாவது நிறைவேற்றி உள்ளீர்களா என கேள்வி எழுப்பினார் செல்போன் கொடுக்கிறேன் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறினார்கள் யாருக்காவது கொடுத்தார்களா? ஆனால்ப்திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாமல் இருந்திருக்கிறார்களா அப்படி எதுவும் இல்லை என்றார்.

பிரிட்ஜ் தருகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் ஆனால் அவர் ஆட்சிக்கு வர மாட்டார் என விமர்சித்தார். நம்முடைய முதலமைச்சர் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை மீண்டும் வாங்கி தருகிறேன் என கூறவில்லை அதற்கு பதிலாக கூப்பன் தருகிறேன் என்று கூறுகிறார் உங்கள் வீட்டில் எது இல்லையோ அதனை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

லேப்டாப் திட்டத்தை நிறுத்தியதும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் அதனை மீண்டும் ஆட்சிக்கு வந்து கொடுத்தது நம்முடைய முதல்வர் என்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் இளைஞர்களுக்கு லேப்டாப்புகள் வழங்கப்படும், தமிழ்நாடு முழுவதும் பத்து லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும், முதியோர் உதவித்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 2500 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3500 ஆக உயர்த்தி வழங்கப்படும், பால் கொள்முதல் விலை ஐந்து ரூபாய் ஒரு லிட்டருக்கு அதிகமாக கொடுத்து வாங்கப்படும், 24 மணி நேரம் கால்நடை மருத்துவமனைகள் இயங்கப்படும் என்றார்.

இந்த தொகுதியில் ஜவுளி பூங்கா மற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள் கட்டித் தரப்படும், செஞ்சேரிமலை பகுதியில் புதிய அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும், குளிரூட்டப்பட்ட காய்கறி சேமிப்பு கிடங்கு அமைத்து தரப்படும்
சூலூரில் சர்வதேச தரத்திலான உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்சூலூரில் புதிய சுற்றுச்சாலை அமைத்து தரப்படும் என்று கூறிய அவர், இதையெல்லாம் செய்து தருவதற்கான ஒரு வாய்ப்பை எங்களுக்கு உருவாக்கி தர வேண்டும், நமக்கு எதிராக நிற்கக் கூடியவர்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக நிற்கக் கூடியவர்கள்
இன்று தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத மாநிலமாக தொடர்ந்து இருப்பதற்கு உங்களுடன் என்று போராடக்கூடிய ஒரே இயக்கம் அதன் தலைவன் நம்முடைய தளபதி தான் என்றார்.

தமிழ்நாடு பாதுகாக்கப்படும் தமிழ்நாட்டை உயர்த்திக் கொண்டே இருப்போம் அதனை செய்து கொண்டிருக்க கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என கூறினார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...