குனியமுத்தூர் விபத்து- மேலும் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கோவை குனியமுத்தூர் சாலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

கோவையில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஏற்கனவே இருவருக்கும் உயிரிழந்த நிலையில் கூடுதலாக ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement

கோவை குனியமுத்தூர் சாலை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நேற்று 66-ஆம் எண் கொண்ட அரசு பேருந்தை மார்ட்டின் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்ற போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் நூர்முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அப்பாஸ் என்பவர் படுகாயமடைந்தார். பெண் ஒருவரும் காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களையும் பேருந்து ஓட்டுநர் மார்ட்டினையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஓட்டுநர் மார்ட்டினும் உயிரிழந்தார்.

இதையடுத்து, காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பாஸ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Advertisement

இந்த விபத்தில் இதுவரை ஆட்டோ ஓட்டுநர் நூர்முகமது, அரசு பேருந்து ஓட்டுநர் மார்ட்டின், அப்பாஸ் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கரும்புக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...