கோவையில் தடகள் போட்டிகள் துவக்கம்…

கோவை: கோவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெற்கு மண்டல தடகளப் போட்டிகள் துவங்கியது.

Advertisement

கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில், 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பி.பி. டேவிட், ஆன்டனி மற்றும் ஆதித் அசன் முகமது ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரீ வர்ஷனா, மோனிகா மற்றும் ராஜ் கவின் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னிலைப் பெற்றனர்.

Advertisement

குண்டு எறிதல் போட்டியில் அணி மற்றும் மித்ரா சுபஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், நீளம் தாண்டுதல் போட்டியில் திப்பிலி மற்றும் சந்தோஷ் பிரியா ஆகியோர் முதல் இடங்களை கைப்பற்றினர்.

உயரம் தாண்டுதல் பிரிவிலும் மாணவர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர்.
பல்வேறு தடகளப் பிரிவுகளில் தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் உற்சாகமாக ஆதரவு அளித்து வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

லூலூ மாலில் ஹெல்மெட் திருட்டு; வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கோவை லூலூ மால் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை இளைஞர் - இளம்பெண் ஜோடி திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video

ஒரு கையில் லேப்டாப் மற்றொரு கையில் பைக்- கோவையில் வைரல் வீடியோ…

கோவை: கோவையில் உயிரைப் பணயம் வைத்து பைக்கை ஓட்டிக் கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த நபரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. ​கோவை, திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே மடியில் லேப்டாப்பை...