தடாகம் பகுதியில் சிறுத்தை- கோழிகளை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் கோழிகளை வேட்டையாடி சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் திருவள்ளுவர் நகர்- சோமையனூர் பகுதியில் வீட்டில் வளர்த்து வந்த கோழிகளை சிறுத்தை கவ்வி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான மாங்கரை, தடாகம், சோமையனூர் திருவள்ளுவர் நகர் பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் நகர், சோமையனூர் பகுதிகளில் சிறுத்தை கருஞ்சிறுத்தை நடமாட்டமும் தென்பட்டது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள் கோழிகள், ஆடுகளை வேட்டையாடி சென்றன. வனத்துறை தரப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையை கண்காணித்து பிடிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சிறுத்தை பிடிப்படவில்லை.

Advertisement

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. திருவள்ளுவர் நகர்- சோமையனூர் க்கு இடைப்பட்ட பகுதியில் மலையை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழிகளை சிறுத்தை கவ்வி சென்றுள்ளது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை தரப்பில் சிறுத்தையை கண்காணிக்க கேமராக்களை பொருத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை விரைந்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மீண்டும் திறக்கப்படும் கோவை குற்றாலம்- வனத்துறை அறிவிப்பு…

கோவை: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம். தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.